×

கார்கில் போரின்போது வீரமரணம் அடைந்த, திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவுத்தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

திருச்சி: கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கபடுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் 2 நாள் சுற்றுபயணமாக சென்னைய்ல் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். இன்று மாலை திமுக டெல்டா மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த வாக்குசாவடி பொறுபாலர்களுகான பயிற்சி பாசறை கூட்டமும், நாளை வேளாண் சங்கங்களின் நிகழ்சியும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைசர் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார்.

கார்கில் போரின் வெற்றி தினமாக இன்று அனுசரிக்கபடுவதை முன்னிட்டு கார்கில் போரில் கலந்து கொண்டு வீர மரணமடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவு தூண் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ளது. விமானநிலையத்தில் இருந்து நேரடியாக அங்குவந்த முதலமைச்சர் மேஜர் சரவணனின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுதினார்.

இதில் முதலமைச்சருடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post கார்கில் போரின்போது வீரமரணம் அடைந்த, திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவுத்தூணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukheri ,Major Saravanan ,Trichy ,Kargil ,battle of Karkil ,B.C. ,Stalin ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...